நான் நானாக இல்லை. என்னுள் கேட்கும் குரல்கள் என்னை சூழ்ந்து அச்சுறுத்துகின்றன. பயம் என்னும் நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொன்று வருவதை யாரிடம் எப்படி சொல்லுவேன். சொல்ல ஆரம்பித்தலே காதல் என்ற முடிவுகே முக்கால்வாசி பேர் வருகின்றனர் . மீதி பேர் எனக்கு யாருடனோ சண்டை என்ற முடிவுக்கு வருகின்றனர். நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்று யாருக்கும் புரிவதில்லை. ஏன் எனக்கே இது என்ன என்று புரியாத குழப்பம். பேரின்பத்தை தேடி அலைகிறேன். வெளியில் பேசும் வார்த்தைகள் குறைந்துவிட்டன. உள்ளே நாளுக்கு நாள் சத்தம் அதிகமாகிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.